தடைகளை தளர்த்தி, திருமண நிகழ்ச்சிகளில் அதிகமானோர் கலந்து கொள்ள அனுமதி

கோவிட் தொற்றுநோய் காரணமாக திருமணங்கள் உட்பட பல நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, திருமண மண்டபங்களில் 100 விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவர். வெளிப்புற திருமணங்களுக்கு அதிகபட்சமாக 150 விருந்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தொடர்ந்தும் திருமணங்களில் மது பயன்படுத்த அனுமதிக்கப்படாது.

இதற்கிடையில், உணவகங்களில், ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 75 பேர் மட்டுமே உணவருந்த அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் வெளிப்புற நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்கூடியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமாக 150 பேர் மட்டுமே இருக்கக்கூடிய ஹாலில் மூன்றில் ஒரு பங்கு இடத்தில் அலுவலக கூட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

இதேவேளை, இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் தளர்த்தப்படவுள்ளன.

Screenshot 20211025 174622 WhatsApp

Leave A Reply

Your email address will not be published.