சகல கிறிஸ்தவ எம்.பிக்களையும் பேச்சுக்கு அழைத்தார் கர்தினால்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கிறித்தவ உறுப்பினர்களையும் சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தச் சந்திப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பேராயர் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை மற்றும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.