எனது அமைச்சின் செயலருடன் பணியாற்ற முடியாமல் உள்ளது மஹிந்தவிடம் கல்வி அமைச்சர் முறையீடு.
தனது அமைச்சின் செயலாளருடன் இணைந்து பணியாற்ற முடியாமல் உள்ளது எனக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளார்.
குறித்த பதவிக்கு வேறு ஒரு பொருத்தமான நபரை நியமிக்குமாறும் தினேஷ் குணவர்தன பிரதமரிடம் தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குறித்த பதவிக்காக வேறு ஒரு நபரின் பெயரையும் கல்வி அமைச்சர் இதன்போது பிரதமரிடம் பரிந்துரைத்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது.
இது குறித்து ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவிப்பதோடு, தான் ஜனாதிபதியிடன் கலந்தாலோசிப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கல்வி அமைச்சருக்குப் பதிலளித்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.