வவுனிக்குள கால்வாய் புனரமைப்பு பணிகள் அரசாங்க அதிபரால் ஆரம்பித்து வைப்பு!
சர்வோதையா அரசசார்பற்ற நிறுவனத்தின் திட்டத்தினூடாக மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளத்தின் கால்வாய் புனரைமப்புக்கான அங்கரார்ப்பண நிகழ்வு (02) இடம்பெற்றது.
மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அனுசரனையுடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த கால்வாயின் புனரமைப்பு பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதற்காக இரண்டு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தென்னியன்குளம் மற்றும் அனஞ்சயன்குளம் ஆகியவற்றின் கால்வாய் புணரமைப்புக்காக 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்ட்டுள்ளது.
மேலும் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட செம்மலை உவர்அணை புனரமைப்புக்காக இரண்டு மில்லியன் ரூபாயும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட குரவில் வீதி வடிகால் புனரைமப்பக்காக 1.5மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த புணரமைப்பு திட்டங்களினூடாக வெள்ளஅனர்த்த அபாயம் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.