உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக பேராசிரியர்கள்

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் தமிழகத்தின் கோவை காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைகழகம் உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிட்டது.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் ஜான் அயோனிடைஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு, ஸ்கோப்பஸ் ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஹை இன்டெக்ஸ், விரும்பித் தேடப்படும் ஆராய்ச்சியாளர், பல்வேறு நிபுணத்துவங்களை ஆதாரமாகக் கொண்ட தரவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இதில் கோவை காருண்யா நிகர்நிலைப் பல்கலைகழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அதாவது, சிவில் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் சினேகா கெüதம், எலக்ட்ரிக்கல் துறை பேராசிரியர் இம்மானுவேல் செல்வகுமார், எலக்ட்ரானிக்ஸ் துறை பேராசிரியர் ஜூட் ஹேமந்த், மெக்கானிக்கல் துறை பேராசிரியர் காட்சன் ஆசீர்வாதம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.