நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நீண்டகால கடன் பெற வேண்டி வரும் – ரணில் விக்ரமசிங்க
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடம் நீண்டகாலகடன் பெறப்படவேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மத்திய கொழும்பிலுள்ள பெரும்பாலானவர்கள் வர்த்தகத்திலேயே ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், இன்று
பொருளாதாரம் முற்றுமுழுதாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மொட்டுவின் கீழ் மக்களின் ஜீவனோபாய வழிமுறைகளை பாதுகாக்க முடியாதெனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
கொரோனாதொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த முடியாது போய் விட்டதாக கூறிய ரணில் விக்ரமசிங்க, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் சர்வதேச நாணய நிறுவனங்களிடமிருந்து பேச்சு வார்த்தை நடாத்தி நீண்டகால கடன்கள் பெறப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.
Comments are closed.