அரக்கோணத்தில் பணத்தை கேட்ட பைனான்சியரை கொலை செய்ய முயன்ற 5 பேர் கைது!!
ரக்கோணத்தில் பைனான்சியரை கொலை செய்ய முயன்ற 5 பேர் கைது, 2 பேர் தப்பி ஓட்டம் இச்சம்பவம் குறித்து நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு சென்னையை சேர்ந்த நிதிநிறுவன தொழிலதிபரான நரேஷ் மேத்தா என்பவர் பணம் கொடுத்து குமார் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான அப்துல் ரகுமான்(வயது 32 ) மற்றும் சதாம் உசேன்(வயது30) ஆகிய இருவருக்கு இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இருவரும் மாதாந்திர தொகையை முறையாக கட்டாத காரணத்தினால் சுமார் 70க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை தற்போது வரை பணம் செலுத்தாமல் இருப்பதாக குமார் தாப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து சதாம் உசேன் அப்துல்ரகுமான் இருவரிடமும் குமார் பணம் கேட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ஆவேசமடைந்த இவர்கள் அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் மற்றும் பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளை சேர்ந்த கூலிப்படையை வைத்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
கூலிப்படைக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை குமாரை தீர்த்துக்கட்ட பேரம் பேசியதாகவும் முதல் தவணையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருத்தணியில் இருந்து தனது பைனான்ஸ் நிறுவனத்தை மூடிவிட்டு அரக்கோணம் வீடு திரும்பும்போது மங்கம்மா பேட்டை மேம்பால பகுதியில் சொகுசு காரில் இருந்து 7 நபர்களும் குமாரை மடக்கி கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதில் குமார் அவர்களிடமிருந்து தப்பித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கார் பதிவு எண்ணை வைத்து காவல்துறை தீவிர வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். வாகன சோதனை போது அரக்கோணம் அடுத்த ஆத்தூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் வாகனமானது சிக்கியது. இதில் 5 பேர் காவலர்களிடம் சிக்கிய நிலையில் 2 பேர் தப்பி ஓடி உள்ளனர்.
மேலும் காரில் இருந்த ஐந்து நபர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் குமாரை கொலை செய்ய வந்ததாக கூறப்படுகிறது. இதில் முக்கிய குற்றவாளிகளான அப்துல்ரகுமான் அவருடைய தம்பி சதாம் உசேன் மற்றும் கூலிப்படையினர் தணிகை போளூர் பகுதியைச் சேர்ந்த நிர்மல், ராஜேஷ், நவீன் பாலகிருஷ்ணாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பைனான்ஸ் செய்பவரிடம் பணம் பெற்றுக் கொண்டு மீண்டும் செலுத்தாதது குறித்து கேட்டதற்காக பணம் கேட்டவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் அரக்கோணம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓடிய 2 நபர்களை காவல்துறை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.