மிகவும் வலுவான ‘பட்ஜட்’ சமர்ப்பிக்க பஸில் திட்டம்.
எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை மிகவும் வலுவானதாகச் சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என்று அரச வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு, வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இம்முறை வரவு – செலவுத் திட்டம் தயாரிப்பின்போது, பெரும் எண்ணிக்கையிலானோரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அபிப்பிராயங்களும் இதற்குப் பெறப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரத்துக்கு மிகுந்த அழுத்தம் ஏற்பட்டிருக்கின்றது.
எனவே, கொரோனா சவால்களை வெற்றிகொண்டு, மிகவும் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் அரச வட்டார தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.