சிறுவர் உரிமைகளை வலுப்படுத்தல் செயற்றிட்டம்.
மாந்தை கிழக்கில் சிறுவர் உரிமைகளை வலுப்படுத்தல் செயற்றிட்டம் ரகமா நிறுவனத்தினரால் முன்னெடுப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேச செயலர் பிரிவில் ரகமா நிறுவனத்தினரால் பிரதேச மட்ட சிறுவர் அமைப்புக்களின் தலைவர்களுக்கான சிறுவர் உரிமைகளை வலுப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் வழிகாட்டல் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேசசெயலாளரின் அனுமதியுடன் அத்துறை சார்ந்த வளவாளர்களின் பங்கேற்புடன் குறித்த செயலமர்வு நடைபெற்றது.
இதனூடாக சிறுவர் உரிமைகள் தொடர்பாகவும், சிறுவர் துஸ்பிரயோகம் நடைபெற்றால் செயற்படவேண்டிய படிமுறைகள் பற்றியும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.