கமல்ஹாசனை இந்தியா முழுவதுக்கும் அடையாளம் காட்டிய படம் `ஏக் தூஜே கே லியே.’
40-ம் ஆண்டுக்குள் நுழைந்திருக்கும் இந்தப்படம் இந்தியாவின் மிக முக்கியமான படங்களின் பட்டியலில் எப்போதும் இடம்பிடிக்கும். `ஏக் தூஜே கே லியே’வும் அதன் ஒரிஜினல் படமான `மரோ சரித்ரா’வும் கிளாசிக்ஸ்!
கமல்ஹாசனை இந்தியா முழுவதுக்கும் அடையாளம் காட்டிய படம் `ஏக் தூஜே கே லியே.’ கமல்ஹாசன் நேரடியாக இந்தியில் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த இந்தத் திரைப்படம் 1981-ம் ஆண்டு இதே ஜூன் 5-ம் தேதி ரிலீஸானாது. 40-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் இந்தப் படத்தைப் பற்றி தெரிந்துகொள்வது இக்கால சினிமா ரசிகர்களுக்கு மிகவும் அவசியமானது.
`ஏக் தூஜே கே லியே’ படத்தில் நடித்தபோது கமல்ஹாசனுக்கு வயது 27. இது அவருடைய 101-வது படம். முந்தைய படமான `ராஜபார்வை’யில் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்த பின், 100 படங்களில் நடித்த மிகப்பெரிய திரை அனுபவத்தோடு `ஏக் தூஜே கே லியே’ மூலம் இந்தியில் ஹீரோவாக அறிமுகமானார் கமல். இயக்குநர் கே.பாலசந்தருக்கு இது இந்தியில் இரண்டாவது படம். `அரங்கேற்றம்’ படத்தின் இந்தி வடிவமான `ஆய்னா’தான் அவரது முதல் படம். இதிலேயே ஒரு குட்டி உதவி இயக்குநராக கமல் ஒரே ஒரு காட்சியில் நடித்திருப்பார். கதாநாயகி ரதி அக்னிஹோத்ரிக்கும் மாதவிக்கும் `ஏக் தூஜே கே லியே’தான் முதல் இந்திப் படம். பின்னணிப் பாடல்களைப் பாடி இந்தப் படத்தின் மூலமாக ஒரு தேசிய விருதை வாங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குமே இதுதான் முதல் இந்திப் படம். படத்தின் தயாரிப்பு, மிகப்பெரிய இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த எல்.வி.பிரசாத்.
நன்றி: விகடன்
Comments are closed.