வரவு – செலவுத் திட்டம் மக்களின் சுமையை குறைக்கவில்லை.
வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் எதிர்நோக்கும் சுமையை குறைக்க அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் அரசாங்கம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
மக்களிடம் பொருட்களை கொள்வனவுச் செய்வதற்கு நிதி இல்லை அல்லது போதிய வருமானம் இல்லாத நிலையில் சில பொருட்கள் கிடைப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இது ஒரு பாரதூரமான பொருளாதார நெருக்கடி என்றும், மேலும் எரிவாயு மற்றும் பால்மா தட்டுப்பாடு ஏற்படுவதுடன், பொருட்களின் விலைகளும் உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கத்திற்கு ஆர்வமோ அல்லது திறமையோ இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.