கொழும்பில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கான அனுமதி திடீர் இரத்து!
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி, இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார திணைக்களம் குறித்த அனுமதியை இரத்துச் செய்துள்ளது.
அரசின் தோல்வி மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்த பிரதான எதிர்க்கட்சி தீர்மானித்திருந்தது.
பொதுமக்கள் ஒன்றுகூடல்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தைப் பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கும் விதமாக கொரோனாத் தடுப்பு ஒழுங்குவிதிகள் மாற்றியமைக்கப்பட்டன.
கொழும்பில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையிலேயே, ஆர்ப்பாட்டத்துக்கான அனுமதி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.