ரயிலில் காய்கறிகளைக் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம்.
நுவரெலியாவில் இருந்து ரயிலில் காய்கறிகளைக் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி,இதற்காக தனி ரயில் பெட்டி அமைக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
மேலும் ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மஹிந்தானந்த இவ்வாறு பதிலளித்தார்.