புது முகங்கள் பாராளுமன்றம் சென்றால் புது யுகம் பிறக்கும்- விண்ணன்
எதிர்வரும் தேர்தலில் கடந்த காலங்களில் வாக்களித்தவர்களுக்கு இம்முறையும் வாக்களிக்காதீர்கள். புதுமுகங்களை அறிமுகம் செய்யுங்கள். புது முகங்களால் புது யுகம் பிறக்கும் என சிறிலங்கா சுகந்திரக் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் விண்ணன் தெரிவித்தார்.
யாழ் ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
நான் வர்தத் துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்தேன். சிறிலங்கா சுகந்திரக் கட்சியினுடைய ஆட்சிக்காலத்திலேயே எமது பிரதேசங்களில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கே எதுவிதமான அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை. அபிவிருத்தி சம்பந்தமான பல விடையங்களை மேற்கொள்ள வேண்டிய கடைப்பாடு சு.கவினருக்கு உண்டு.
வடக்கு கிழக்கு இனைந்த சமஸ்டிமுறையிலான அரசியல் தீர்வை நாம் பெற வேண்டும். சுகந்திரக் கட்சியினரே யுத்தத்தை முடித்து வைத்தவர்கள் என்ற வகையில் அவர்களிடம் தீர்வை கேட்பதற்கான உரிமை எமக்கு உண்டு. அது போல் தீர்வை வழங்க வேண்டிய கடைப்பாடும் அவர்களுக்கு உண்டு. நான் நாடாளு மன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் பட்சத்தில் இந்த இரு பகுதியினரையும் இனைக்கும் குரலாக செயற்படுவேன் என்றார்.
Comments are closed.