மீண்டும் கொரோனா பரவ வாய்ப்புக்கள் – சுகாதார சேவைகள் பணிப்பாளர்
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து சுகாதார விதிமுறைகள் அமுல்படுத்தப்படாவிட்டால், கொரோனா வைரஸ் மீண்டும் சமூகத்தில் பரவ அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை பொதுப்போக்குவரத்து பஸ்களில் சுகாதார விதிமுறைகள் முறையாக செயல்படுத்தப்படவில்லையென பல்வேறு தரப்பினரும் முறைப்பாடுகளை செய்து வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சமூக இடைவெளி தொடர்பான சட்டத்தை மீறி வருவதாக சுகாதார தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதனை சுட்டிக்காட்டிய அவர், சட்டங்களை மீறும் இவ்வாறானவர்களை கைது செய்ய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
Comments are closed.