கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மக்கள் பாவனைக்கு….
கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையான பகுதி எதிர்வரும் 28 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் குறித்த வீதி திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீதியில் மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருணாகல் மற்றும் யங்கபிட்டிய ஆகிய 5 வௌியேற்றங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2017 ஆம் ஆண்டு குறித்த வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.