எதிர்பாராத பல திருப்பங்களுடன் பிக் பாஸ் 5.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று வருகிறது.
இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா என 6 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதில் அபிஷக் மட்டும், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு, ரசிகர்களால் முக்கிய போட்டியாளர் என்று பார்க்கப்பட்ட, இசைவாணி வெளியேறியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இந்த செய்தி, இசைவாணியின் ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது.