மேல் மாகாணத்தில் விசேட சோதனை தீவிரம்!
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்கான விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக மேல் மாகாணத்தில் நேற்றுக் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மதியம் 3 மணியிலிருந்து மாலை 5 மணிவரையும் 1,475 பொலிஸார் இணைந்து சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 23 ஆயிரத்து 193 பேர் சோதனைக்கு உட்டுபடுத்தப்பட்டுள்ளதுடன் 6 ஆயிரத்து 324 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 823 பொது இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் முகக்கவசம் அணியாது வீதிகளில் பயணித்த 4 ஆயிரத்து 351 பேருக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
918 போக்குவரத்து பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 3 ஆயிரத்து 328 மோட்டார் சைக்கிள்களும், 3 ஆயிரத்து 777 ஓட்டோக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த வாகனங்களில் பயணித்த 11 ஆயிரத்து 340 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவர்களில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாத 3 ஆயிரத்து 334 பேர் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.