புதிய வகை கொரோனா ‘ஒமிக்ரான்’ விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு எனக் கூறியுள்ளது. மேலும், வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

நேற்று நடந்த கூட்டத்தில், விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான ‘ஒமிக்ரான்’ என்பதை இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு பெயராக சூட்டியுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த வைரசை ‘கவலைக்குரிய வைரஸ் வகை’ என்ற பிரிவில் விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் 6 பேர், போட்ஸ்வானாவில் 3 பேர், ஹாங்காங், இஸ்ரேலில் தலா ஒருவர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.