ஐஸ்வரியங்களை அள்ளி அருள் புரியும் வரலட்சுமி விரத உற்சவம் இன்று யாழ் மாவட்டத்தில் ….
இந்து மக்களுக்கு மிகவும் உகந்த விரதங்களின் ஒன்றான ஐஸ்வரியங்களை அள்ளி அருள் புரியும் வரலட்சுமி விரத உற்சவம் இன்று யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து விஸ்ணு ஆலயங்களிலும் சிறப்பாக இடம்பெற்றது
இந்த விரத நாளினை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஐப்பெருமாள் ஆலயத்திலும் இன்று வரலட்சுமி விரதம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ வேங்கடவரதராஐப்பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி,பூமாதேவிக்கு விசேட அபிசேங்கள்,ஆராதனைகள்,என்ப இடம்பெற்று ஈசனமூலையில் வீற்று இருக்கும் மஹாலட்சுமிக்கான அபிசேங்கள் ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியுடாக அலங்காரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இவ் கிரிகை உற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ செ.ரமணீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்தனர்
இவ் மஹாலட்சுமி விரத உற்சவம் நிறைவு பெற்றதுடன் பக்தர்களுக்கான நூல் காப்பு சிவாச்சாரியார்களால் வழங்கப்பட்டது..
நாட்டில் எற்பட்டுயிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக சுமார் 100 பேர்கள்,100 பேர்களாக ஆலயத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.சமூக இடைவெளியை பின்பற்றுமாறு ஆலய நிர்வாகத்தினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.