2020 நாடாளுமன்றத் தேர்தல் – பெரும்பான்மை ஒரு கனவா?

2020 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. ஒவ்வொரு கட்சியும் அதன் தேர்தல் பிரச்சாரத்திற்காக தீவு முழுவதும் பிரசாரங்களை நடத்துகின்றன.

ஆனால் இந்த முறை தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றம் முன்பு போல எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நாடாளுமன்றமாக இருக்குமா?

சில தேர்தல் ஆய்வாளர்கள், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் (தொலைபேசி) சமீபத்திய எழுச்சி , ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவுக்கு (மொட்டு) முன்பு இருந்த வாக்குகளின் எண்ணிக்கையை கூட கொடுக்காது எனவும், பெரும்பான்மையை உருவாக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் மகிந்தவின் மொட்டு கட்சியினர் பெரும்பான்மையைப் பெற கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ராஜபக்ஷ தலைமையிலான மகிந்தவின் மொட்டு கட்சியினர் இதுவரை தேர்தலில் முன்னிலை வகிப்பதாகத் தோன்றினாலும், தற்போதைய சூழ்நிலையில் பெரும்பான்மையை நிலைநாட்ட கடுமையான போராட்டத்தை நடத்தி வருவது கண்கூடாகத் தெரிகிறது.

மேலும், ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (யுஎன்பி) எதிர்பார்த்த எண்ணிக்கையிலான இடங்களைப் பெற முடியாது என்று கணிப்பாளர்கள் நம்புகின்றனர்.

எதிர்வரும் தேர்தலில் கீழ் காணும் ஒரு நிலையே தெரிகிறது என்கிறார்கள் அவர்கள் :-

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண (மொட்டு கட்சி) – 106
ஐக்கிய மக்கள் சக்தி (தொலைபேசி) – 80
தமிழ் தேசிய கூட்டணி (வீடு) – 15 – இதில் மாற்றங்கள் வரலாம்?
ஐக்கிய தேசிய கட்சி (யானை) – 18
தேசிய மக்கள் படை – 3
மற்றவை – 3

பாராளுமன்றத்தில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 225ல் பெரும்பான்மை பெற 113 இடங்கள் 2/3 கட்டாயம் தேவை. மேற்கண்ட முன்னறிவிப்பின்படி, மக்கள் முன்னணி (மொட்டு) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (தொலைபேசி) ஆகிய இரு கட்சிகள் மட்டுமே இதற்கு திறன் கொண்டவர்களாக உள்ளனர். பொதுஜன முன்னணியானது பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைக்கும் என்று பல கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், சில கருத்துக் கணிப்புகள் பொதுஜன முன்னணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே உள்ள உள் முரண்பாடுகளால் மொட்டு கட்சி வாக்குகள் சிதறி வேறு இடங்களுக்கு போகலாம் என நோக்கப்படுகின்றன.

தேர்தலின் பின் ஐதேகவில் உள்ள சிலர் வேறு கட்சிகளுக்கு தாவலாம் எனவும் நினைக்கத் தோன்றுகிறது. அது யாரை யாரையெல்லாம் அடுத்த தரப்புக்கு மாற்றுமோ என்பது தேர்தல் முடிவுக்கு பின்தான் தெரியும்?

– ஜீ

Comments are closed.