சபையில் நடந்த சம்பவங்களுக்கு உடனடியாகத் தீர்ப்பு வழங்குங்கள்.
“குழுக்களை அமைத்து காலம் கடத்த வேண்டாம். சபையில் நடந்த சம்பவங்களை அவசர விடயமாகக் கருதி நீங்களே ஆராய்ந்து பார்த்து தீர்ப்பை வழங்குங்கள்.”
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று கோரிக்கை விடுத்தார்.
சபையில் அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:-
“பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லையெனில் அது பாரதூரமான விடயமாகும். எனவே, கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் சி.சி.ரி.வி. காட்சிகள் உள்ளன. அவற்றை நீங்கள் ஆராய்ந்து பார்த்து தீர்வொன்றை எடுங்கள். அதற்கான பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
மாறாக குழுக்களை அமைத்தால் அது காலம் கடந்துவதாகவும், குழப்பங்களை விரிவுபடுத்துவதாகவுமே அமையும்” – என்றார்.