சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் அவசியமில்லை…
நாட்டுக்கு வருவதற்கு முன்னர் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளை சுற்றுலாப் பயணிகளில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,எவ்வாறாயினும் 12 வயதுக்கு மேற்பட்டோர் இலங்கைக்கான விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெறப்பட்ட பரிசோதனை அறிக்கையை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது