இலங்கை முதலீட்டு அதிகார சபைக்கு புதிய தலைவர்..?

இலங்கை முதலீட்டு அதிகார சபையின் புதிய தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் சபை இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்தப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்தது.

இம்மாதம் முதலாம் திகதி பணிப்பாளர் சபை ராஜினாமா செய்ததையடுத்து அதன் தலைவர் பதவியும் ரத்தாகியது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நான்கு பேர் கொண்ட பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டது.
இதன்படி, தமது பதவி விலகல் கடிதத்தை அண்மையில் ஜனாதிபதியிடம் குறித்த சபை கையளித்திருந்தது.
இதன்போது, தலைவரும் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த நிலையில், அதனை ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹட்டால மீண்டும் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.