முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தற்போதுவரை கோவை, நமக்கல், ஈரோடி, சேலம், சென்னை என 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கர்நாடகவிற்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, நாமக்கல் மாவட்டம் கோவிந்தம் பாளையத்தில் உள்ள, தங்கமணி வீட்டில் காலை 6:45 மணி முதல் 18 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.