SLPP அல்லது UNP க்கு தான் பொது தேர்தலின் அதிகாரம் கிட்டும் – ரணில் விக்ரமசிங்க

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கே எதிர்வரும் பொது தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்ற முடியுமென ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரத்மலானையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை மொட்டு கட்சியினரால் பாதுகாக்க முடியாதென தெரிவித்த ஐக்கிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், அதனை ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரமே பாதுகாக்க முடியுமெனவும் கூறினார்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் அதிகாரத்துக்காக போட்டியிட்டது ஐக்கிய தேசிய கட்சியும் தற்போது மொட்டு கட்சி என்ற பெயரில் ஏற்கனவே பல்வேறு பெயர்களில் இருந்து வந்த தரப்பினரும் மட்டும் தான் எனவும் இதன் போது சுட்டிக்காட்டினார்.

அதிகாரத்துக்கு வரக்கூடிய கட்சிகளாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமே இருக்கின்ற நிலையில் தனது தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களை ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.

Comments are closed.