ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து 24 மணித்தியாலங்களில் எரிபொருளின் விலை குறைக்கப்படும் – சஜித் பிரேமதாச
தமது அரசாங்கத்தின் கீழ் மக்களுக்களின் கரங்களில் பணப்புலக்கத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமது அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தவுடன் பணப்புலக்கம் ஏற்படும் ஒரு பொதியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் அதேவேளை அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களில் இந்நாட்டில் எரிபொருளின் விலையை குறைக்க உள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை குறைக்கவுள்ளதாக தெரிவித்த தற்போதைய அரசாங்கம் அதனை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாவனையாளர்கள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் செலுத்திய முழுப்பணத்தையும் மீண்டும் அவர்களுக்கே பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் இதன் போது நம்பிக்கை தெரிவித்தார்.
Comments are closed.