அமெரிக்காவிலும் TIC TOK செயலிக்கு தடை – அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்காவில் டிக்டொக் செயலியை தடைசெய்வுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டொக் செயலியின் ஊடாக அமெரிக்க பிரஜைகளின் தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அமைய இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சுமார் 80 இலட்சம் அமெரிக்கர்கள் டிக்டொக் செயலியை பயன்படுத்தும் நிலையில் இதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதன் ஊடாக சீன நிறுவனத்திற்கு பாரிய பொருளாதார பின்னடைவு ஏற்படுமென எதிர்வு கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த மாதமளவில் இந்தியாவில் சீன நிறுவனத்தின் டிக்டொக் உள்ளிட்ட பல முன்னணி செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.