2022இல் ஜெனிவாவில் இலங்கைக்கு நெருக்கடி! – ராஜித எம்.பி.ஆரூடம்.
“2022ஆம் ஆண்டு மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் இலங்கைக்குக் கடும் நெருக்கடி ஏற்படும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் மார்ச்சில் ஆரம்பமாகின்றது. இலங்கை தொடர்பில் இம்முறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றே எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
சர்வதேசத்துடன் நல்லுறவைப் பேணவில்லை. மனித உரிமைகளை மீறும் 45 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
2022ஆம் ஆண்டு என்பது தீர்க்கமான வருடமாக அமையும். பல மாற்றங்கள் இடம்பெறும். ஆட்சி மாற்றம்கூட ஏற்படும்” – என்றார்.