அம்பாந்தோட்டை தம்முல்ல பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் இறந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்முல்ல பிரதேசத்தில் இன்று காலை 9.55 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தம்முல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயங்களுடன் காணப்பட்ட குறித்த பெண், தங்காலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments are closed.