கிளிநொச்சியில் இளம் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.
கிளிநொச்சியில் 03 பிள்ளைகளின் இளம் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
32 வயதுடைய நிலகரட்ண ஜெயசீலி என்ற 03 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு தூ.க்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான இவர் முன்பள்ளி ஆசிரியையாக சேவை புரிந்து வந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது கணவர் பிரிந்துள்ள நிலையில் 3 பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.