கண்டி மாவட்ட முஸ்லிம்களின் பிரதிநிதித்துவதை பெண்களால் மட்டும்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
இம்முறை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்~ அவர்களை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தது பெரும்பான்மையின சிங்கள பெண்களே. இன்று நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடையவுள்ளன. உண்மையிலே கண்டி மாவட்ட முஸ்லிம்களின் பிரதிநிதித்துவதை பெண்களால் மட்டும்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நாங்கள் கூடி வாழும் சிங்கள பெண்தாய்மார்களோடு இணக்கமாகவும் சிநேகமாக இருக்க வேண்டும். இதுவே எமது ஒற்றுமைக்கான அடிப்படையாகும். இத்தேர்தலில் முஸ்லிம் பெண்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருக்க வேண்;டும் என்று கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன வேட்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் போட்டியிடும் வேட்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் ஹாஜியாரை ஆதரித்து பெண்களுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கெலிஓய எலமல்தெனியவில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன வேட்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
முஸ்லிம் பெண்கள் எல்லோரும் நிம்மதியாகவும் பாதுகாப்புடனும் தம்முடைய உடை கலாசாரத்தைப் பேணி வாழ்வதற்கான ஒரு நல்ல சூழலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்~வின் அரசாங்கத்தினால் மட்டும்தான் ஏற்படுத்த முடியும். தேர்தலில் சனநாயகத்தின் முக்கியத்தை கண்டி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உணர வேண்டும். கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம் பெண்கள் தங்களுடைய உரிமை விடயத்தில் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தார்கள். இத்தேர்தலில் முஸ்லிம் பெண்களின் தெரிவு சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் கடந்த தேர்தலில் எமது முஸ்லிம் தலைவர்களுடைய பிழையான வழிகாட்டுதலுக்கும் வெறுமையான உணர்ச்சிகளுக்கு கோசங்களுக்கு ஏமாற்றப்பட்டோம் என்ற கருத்து நிலவுகிறது. அந்த கருத்தை நாம் முதலில் மாற்றியமைக்க வேண்டும். அவ்வாறு வாக்குப் பிச்சைக்காகப் பேசும் பசப்பு வார்த்தைகளுக்காக முஸ்லிம் பெண்கள் மக்கள் ஏமாறக் கூடாது. அவர்களுடைய பேச்சின் உண்மை நிலை என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். நாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுபவர்களாக இருக்க முடியாது. நாமும் சிந்திக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். ஒரு புதிய சிந்தனை ஊடாக நாம் தொடர்ச்சியாக மாற்றத்தை ஏற்படுத்தக கூடியவர்களாக முஸ்லிம் பெண்கள் இருக்க வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு முஸ்லிம் பெண்களுக்கு இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
02-08-2020
Comments are closed.