தேர்தல்களில் மட்டுமே தோன்றிய அரசியல்வாதிகள் இருந்தபோது, நான் எப்போதும் மக்களிடையே இருந்தேன் – சஜித்
ரணசிங்க பிரேமதாசவிற்குப் பிறகு கொழும்பில் பிறந்த எந்த பிரதமரும் கொழும்பு மக்களுக்கு சேவை செய்யவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று (02) கொட்டாஞ்சேனையில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் இப்போது தேர்தல் காரணமாக வீதிகளில் இருந்தபோதிலும், அவர்கள் கடந்த காலங்களில் டைகோட் அணிந்திருப்பதைக் காண முடிந்ததே தவிர மக்களோடு காண முடியவில்லை, ஆனால் நான் எப்போதும் மக்களிடையே இருந்தேன் என்று அவர் தெரிவித்தார்.
அரசியல்வாதிகளை தேடிச் செல்ல வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படாது என்றும், தனது ஆட்சியில் தானே மக்களிடம் வந்து வீடுகளை கட்டித்தருவேன் என்றும் அவர் கூமேலும் தெரிவித்தார்.
“நிதி அமைச்சர்கள் கொழும்பிலிருந்து வந்தார்கள், பிரதமர்கள் வந்தார்கள். இவர்கள் வட கொழும்புக்கு என்ன செய்தார்கள் ? இந்த முறை அசல் பிரேமதாச கொழும்பு வடக்குக்கு வந்துள்ளேன் ”என்றார் அவர்.
Comments are closed.