சச்சின் டெண்டுல்கரின் 23 வருடச் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர்.
பாகிஸ்தான் அணியில் தற்போது பல சாதனைகளை படைத்து வருபவர் அந்த அணியின் விக்கெட் கீப்பர் முஹம்மது ரிஸ்வான். கிரிக்கெட்டுக்கு வந்த புதிதில் கீழ் வரிசையில் களமிறங்கி கொண்டிருந்த இவர் சிறிது காலம் முன்பு தான் துவக்க வீரராக மாறினார். அப்போது இருந்தே அதிகாரங்கள் கொடுத்துக்கொண்டே ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி கொண்டிருக்கிறார் இவர். கேப்டன் பாபர் அசாம் உடன் இணைந்து இவர் கொடுக்கும் தூக்கத்தினால் பாகிஸ்தான் அணி பல போட்டிகளில் வென்றுள்ளது. கடந்த ஆண்டு முதலே சிறந்த பார்மில் இருக்கும் இவர் இந்த ஆண்டு உச்சபட்ச வேகத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார். கடந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் கடந்து பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக பெற்ற முதல் வெற்றியில் அதிகம் பங்காற்றியவர் இவர்.
மேலும் இந்த ஒரு ஆண்டில் இவர் படைத்த சாதனைகள் பல இருக்கின்றன. ஒரே ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் இவர் 1326 ரன்கள் குவித்துள்ளார் இதுவரை இத்தனை இரங்கலை ஒரே ஆண்டில் யாரும் எடுத்தது கிடையாது. மேலும் இவர் 13 முறை 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளதும் சாதனை தான். ஒரே ஆண்டில் 119 பவுண்டரிகளை ரிஸ்வான் விளாசியுள்ளார். இதையும் இதற்கு முன்பு வரை யாரும் செய்தது கிடையாது. இந்த ஆண்டு இவர் அடித்த நாற்பத்தி இரண்டு சிக்சர்கள் ஒரே ஆண்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்களாகும். எட்டு முறை இந்த ஓராண்டில் மட்டும் இவர் நாட் அவுட்டாக இருந்துள்ளார். இதுவும் சர்வதேச டி20 வரலாற்றில் சாதனையாக மாறியுள்ளது.
மேலும் இந்த ஓராண்டில் மட்டும் 5 முறை தொடர் நாயகன் விருதை ரிஸ்வான் வென்றுள்ளார். இதற்கு முன்பு இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான் ஒரே ஆண்டில் 5 முறை தொடர் நாயகன் விருதை வென்று இருந்தார். தற்போது அந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் ரிஸ்வானும் இணைந்துள்ளார். மெண்டிஸ், ஷகிப், தில்சன், டிவிலியர்ஸ் ஆகியோர் இந்த விருதை ஒரே ஆண்டில் 4 முறை வென்றுள்ளனர். பெரும்பாலும் சச்சினின் சாதனைகளை விராட் கோலி தான் தகர்த்து வருவார். ஆனால் தற்போது அதை ஒரு பாகிஸ்தான் வீரர் தகர்த்துள்ளதால் ரசிகர்கள் பெருவாரியாக அவரை பாராட்டி வருகின்றனர்.