இந்தியாவிற்கு எதிராக கருத்து: பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் முடக்கம்
இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைப் பதிவிட்டு வந்ததாக பாகிஸ்தான் நாட்டின் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் 20 யூடியூப் சேனல்கள் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் அத்துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா யூடியூப் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ள 20 யூடியூப் மற்றும் 2 இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்ட யூடியூப் தளங்கள் முடக்கப்பட்டன.