சஜித்தின் “மூச்சு” திட்டத்திற்காக சீனத் தூதுவர் 200 இலட்சம் ரூபா நிதியுதவியை வழங்கினார்
சீன அரசாங்கம் இன்று (ஜன. 22) ஐக்கிய மக்கள் சக்தியின் “மூச்சு” திட்டத்திற்காக தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதுடன் சிறுநீரகம் தொடர்பான நோய்களை பரிசோதிப்பதற்கான அத்தியாவசிய சிறுநீரக சிகிச்சை இயந்திரத்திற்காக 200 இலட்சம் ரூபா நிதியுதவியை வழங்கியது.
கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் Cheejong Hong மற்றும் சீனாவின் பிரதிநிதிகள் குழுவினால் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் யோசனைக்கு அமைவாக, கொரோனா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், வைத்தியசாலைகளை வலுப்படுத்தவும் என இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
“மூச்சு” திட்டத்தின் மூலம் கடந்த 34 சுற்றுக்களில் ஒரு மில்லியன் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் நாட்டின் வைத்தியசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தச் செயற்பாடு மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும், முறையாகவும், உகந்ததாகவும் முன்னெடுக்கப்படுவதை அவதானித்த சீனத் தூதுவர் Cheejong Hong, எதிர்காலத்திலும் இவ்வாறான நன்கொடைகளை வழங்க எதிர்பார்த்துள்ளார்.
இலங்கைப் பிரஜைகளின் நலனுக்காக சீன அரசாங்கம் செய்து வரும் பங்களிப்பிற்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாரம்பரிய எதிர்ப்பைத் தாண்டி நாட்டிற்கு தொடர்ந்தும் பெறுமதி சேர்ப்பதாகத் தெரிவித்தார்.