பேரணாம்பட்டு பகுதியில் மீண்டும் நில அதிர்வு : அச்சத்தில் பொதுமக்கள்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியல் மீண்டும் இன்று அதிகாலை 03:05 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த 22ஆம் தேதி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அங்கே, வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு விளக்கம் அளித்தனர்.

முன்னதாக, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கிராமத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதி நில அதிர்வு ஏற்பட்டு பல வீடுகள் விரிசல் விட்டது. இதனால், பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

அதனைத் தொடர்ந்து இந்த மாதம் 3ஆம் தேதி டிடி மோட்டூர் கமலாபுரம் ஆகிய கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி அச்சத்தில் இருந்தன.

இதனைத் தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக டிடி மோட்டூர் கிராமத்தில் நில அதிர்வு ஏற்பட்டு மீண்டும் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி இரவு பேர்ணாம்பட்டு தரைகாடு பகுதியில் பெரிய சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால், கிராம மக்கள் வீட்டைவிட்டு தெருக்களில் வந்து தஞ்சமடைந்தன.

தொடர்ந்து குடியாத்தம் பேர்ணாம்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு ஏற்படது குறித்து, வருவாய்த்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக புவியியல் வல்லுனர்களை வைத்து ஆய்வு செய்தல் போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அங்கே எந்த ஒரு ரிக்டர் அளவிலும் நில அதிர்வு பதிவாகவில்லை எனவும் இதனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் பேர்ணாம்பட்டு வருவாய்த்துறையினர் தெரிவித்தனர் இந்நிலையில், பேரணாம்பட்டு பகுதியல் மீண்டும் இன்று அதிகாலை 03:05 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.