ரோஜா மலர்களால் ஆன கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பம்!
ஒடிசாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் ரோஜா மலர்களை கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை வடிவமைத்து அசத்தி உள்ளார். அவர் 5400 ரோஜா மலர்களுடன் பிற பூக்களையும் சேர்த்து இந்த மணல் சிற்பத்தை வடிவமைத்து உள்ளார். 50 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்ட இந்த சாண்டா கிளாஸ் சிற்பத்தை வடிவமைக்க 8 மணி நேரம் ஆகியுள்ளது. சுதர்சன் மற்றும் அவரது குழுவினர் சேர்ந்து இதற்கான ஆயத்த பணிகளுக்காக 2 நாட்கள் எடுத்துள்ளனர்.
அவர் அந்த மணல் சிற்பத்தில் “மெர்ரி கிறிஸ்துமஸ், கிறிஸ்துமஸ் விழாவை கொரோனா விதிமுறைகளை மீறாமல் கொண்டாடி மகிழுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பத்மஸ்ரீ விருது வென்ற சர்வதேச மண் சிற்பக்கலை நிபுணர் சுதர்சன் பட்நாயக் கூறியதாவது, “உலகம் முழுவதும் கொரோனாவின் 3-வது அலை ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது. அதனை முன்னிறுத்தி இந்த சிற்பத்தில் இருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவும் என்ற செய்தியை பரப்பும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மணல் சிற்பம் மூலம் புதிய சாதனை படைக்கப்படும்” என்று கூறினார்.