வேகமெடுக்கும் வைரஸ் பரவல் : தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் தீவிரமாகி வருகிறது. அந்த வகையில் பிரான்சில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பிரான்சில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்தது. அங்கு வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 611 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 90 லட்சத்து 88 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே அங்கு ஒமைக்ரான் வைரசும் விரைவாக பரவி வருவதால், நிலைமை இன்னும் மோசமாகலாம் என சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அதிபர் மேக்ரான் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.