பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அதிரடி தகவல்.
எதிர்வரும் புதன்கிழமை முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நேரிட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
அதன்படி ,இயலுமானளவு ஆகக் குறைவாகவே பஸ் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறுகின்றார்.
மேலும் ,கொவிட் அச்சுறுத்தல் காரணமாக ஆசன எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை அழைத்து செல்ல முடியும் என்ற சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.