சுய தனிமைப்பட்டோருக்கு விசேட ஒழுங்குகள் பூர்த்தி – யாழ்.அரச அதிபர்

சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மாலை 4மணி தொடக்கம் 5மணிவரை வாக்களிக்கும் வகையில் விசேட ஒழுங்கமைப்புக்களை செய்துள்ளோம். பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஊடாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. என யாழ் அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் 2020 தொடர்பில் அனைத்து செயற்பாடும் பூர்த்தியாகிய நிலையில் வாக்களிப்பு தொடக்கம் பெறுபேறுகள் வெளியாகும் வரையிலான நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஒழுங்குகள் குறித்து கட்சிகளின் தலைமைகளுக்கிடையேயான தெளிவுபடுத்தலும் ஊடக சந்திப்பும் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இன்று (03.08.2020) மாலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இத் தெளிவுபடுத்தல் நிகழ்வின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோணா கால சட்டங்கள் ஒழுங்குகள் குறித்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நடைமுறைகளை கையாள வேண்டும். ஆள் அடையாளம் உறுதிப்படுத்துவதுடன் சுகாதார நலன் கருதி தங்களால் பேனா கொண்டுவர முடிந்தால் கொண்டுவரலாம். ஆனால் கட்டாயம் இல்லை என்றார் .அத்துடன் தேர்தல் ஒழுங்குகள் வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கான பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டதுடன் சுகாதார நடைமுறையுடனான தேர்தல் வாக்களிப்பு காணொளியும் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.