வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வைகைப்புயல் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடிகர் வடிவேலுவின் தற்போதைய உடல்நிலை குறித்து ஶ்ரீ ராமச்சந்திரா மருந்துவமனை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.