2021ம் ஆண்டின் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலை வகித்த சீனா!
அமெரிக்கா தொடங்கி ஐரோப்பா சீனா மத்திய கிழக்கு நாடுகள் இந்தியா ரஷியா உள்பட விண்வெளி பந்தயத்தில் பல நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் கோடிக் கணக்கிலான பணம் விண்வெளி ஆராய்ச்சிக்காக செலவிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டில் சீனா 55 விண்வெளி ஏவுதளப் பணிகளை மேற்கொண்டுள்ளது என சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்(சி ஏ எஸ் சி) தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று சீனா 2021ம் ஆண்டில் தனது கடைசி விண்வெளி ஏவுதளப் பணியை மேற்கொண்டது. சீனாவின் 55வது விண்வெளி ஏவுகணை வாகனம் லாங் மார்ச் 3பி பரிசோதனை வடிவிலான செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது. இஹன்மூலம், உலகில் எந்த நாட்டிலும் இல்லாத விதமாக சீனாவின் லாங் மார்ச் ராக்கெட்டுகள் அதிக எண்ணிக்கையில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
விண்ணில் ஒரு விண்வெளி நிலையத்தின் ஏற்படுத்தும் பணிகளில் சீனா இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விண்வெளி திட்டங்களில் ஒன்றாக சீனாவின் சார்பில் விண்வெளிக்கு சில வீரர்களை அனுப்பும் திட்டம் பார்க்கப்பட்டது.
கடந்த ஆண்டு சீனா முதல்முதலக பெண் வீராங்கனையை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தது.
இது ஒருபக்கம் இருக்க, சீனா பூமியை நோக்கி திரும்பி வரும் ராக்கெட்டுகளை முறையாக திட்டமிட்டு செயல்படுத்தவில்லை. கடலில் விழுவதற்கு பதிலாக நிலப்பகுதியில் வந்து விழுகின்றன என்பன போன்ற புகார்களும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு நிலவில் ஆராய்ச்சி பணிகளுக்காக விண்கலங்களை அனுப்பும் திட்டம் உள்ளிட்ட புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் சீனா முனைப்பு காட்டி வருகிறது. மேலும், வின்வெளி நிலையத்தின் பணிகள் முழுமையாக முடிக்கவும் அதன்மூலம், விண்வெளி துறையில் ஆதிக்க சக்தியக இருந்து வரும் அமெரிக்காவுக்கு போட்டியாக உருவெடுக்க சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.