இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல.
வடகொரியா நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் அதிபராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
கொரியாவின் தொழிலாளர் கட்சியின் 8ஆவது மத்தியக் குழுவின் 4வது கட்சி பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
வடகொரியாவில் 2022-ம் ஆண்டின் முக்கிய இலக்கு பொருளாதார வளர்ச்சியும், பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற்றமும் தான். வடகொரிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் 5 ஆண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல. வளர்ச்சி திட்டங்களில் தான் இனி முழு கவனமும் செலுத்தப்படும்.தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது வரவிருக்கும் ஆண்டிற்கான முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும்.
இருந்தாலும் கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் ஸ்திரமற்ற இராணுவ சூழல் காரணமாக வடகொரியா தனது பாதுகாப்பு திறன்களை தொடர்ந்து பலப்படுத்தும்.