இஸ்ரேலில் இருந்து “புளோரோனா என்ற புதிய வில்லன்”

கொரோனாவின் தாக்கத்திலிருந்து வெளியே வருவதற்குள் டெல்டா உருவாகி அடுத்த அலையை ஏற்படுத்தி, அதிலிருந்து மீள்வதற்குள் ஒமைக்ரான் வந்து, தற்போது 2022-ஆம் ஆண்டின் மீதான நம்பிக்கையை தவிடுபொடியாக்க டெல்மைக்ரான் என்ற புதிய வில்லன் உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 88 பேரும், டெல்லியில் 67 பேரும், தெலங்கானாவில் 38 பேரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 34 பேரும், கர்நாடகத்தில் 31 பேரும், குஜராத்தில் 30 பேரும், கேரளத்தில் 27 பேரும், ராஜஸ்தானில் 22 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்டா வகை கொரோனா நாட்டில் பரவலாக பரவியிருந்த நிலையில், தற்போது உலகம் முழுக்க ஒமைக்ரான் அதிகளவில் பரவி வருகிறது.

ஒமைக்ரான் தொற்று முதல்முறையாக தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. இது பல மடங்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸாகவும், இது அதிதீவிரமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும், அதே வேளையில், டெல்டா வகை கொரோனாவை விடவும், இது குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டது. ஒமைக்ரான் பாதித்தவர்களின் பலி எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.

ஆனால், தற்போது டெல்டா மற்றும் ஒமைக்ரானின் கூட்டுச்சேர்க்கையான டெல்மைக்ரான், இரண்டு வைரஸ்களின் அமைப்பையும் ஒருங்கே பெற்றுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதற்கு டெல்மைக்ரான் வகை கொரோனா பரவி வருவதே காரணம் என்று கூறப்படுகிறது.

கொரோனா… டெல்டா… ஒமைக்ரான்…! அடுத்து டெல்மைக்ரான்.. அது என்ன டெல்மைக்ரான் என்று புரிந்துகொள்ள அதிக சிரமப்பட வேண்டாம். உருமாறிய டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ்களின் கூட்டுச் சேர்க்கையே டெல்மைக்ரான். இது ஒமைக்ரானை விட அதிதீவிரமாகப் பரவும் தன்மை கொண்டதாகும்.

இப்போது இஸ்ரேலில் புதிய வகை கரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன், சாதாரண காய்ச்சலுக்கான (ப்ளூ) பாதிப்புகளையும் ஏற்படுத்துவதால், இதற்கு புளோரோனா என்று பெயரிடப்பட்டுள்ளது.

மத்திய இஸ்ரேலின் பெட்டாஹ் திக்வா நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் அண்மையில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணுக்கு, இந்த புதிய புளோரோனா வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பெண், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர் என்பதும், இவரது மருத்துவப் பரிசோதனையில், சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன், கொரோனா பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், அவருக்கு பெரிய உடல்நல பாதிப்புகள் ஏதுமில்லை, லேசான அறிகுறிகளே தென்படுகின்றன, விரைவில் அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இஸ்ரேலின் சுகாதாரத்துறை ஆய்வுகளை முன்னெடுத்துள்ளன. சாதாரண காய்ச்சலுக்கான கிருமியும், கொரோனாவின் மோசமான பாதிப்புகளும் ஒன்று சேர்ந்து மிக மோசமான பாதிப்பு ஏற்படுத்துமோ என்று கவலை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, ஒமைக்ரான் பாதிப்பினால், இஸ்ரேலில் ஐந்தாவது கொரோனா அலை தாக்கியிருக்கும் நிலையில், தற்போது புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, அந்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 4,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.