முழு நாடும் சிக்கலில் உள்ளது .. நாட்டை செய்யக்கூடியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் : சுசில் பிரேமஜயந்த
செய்ய முடியாத விடயங்களைச் செய்ய முற்பட்டு முழு நாடும் இன்று சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக இன்றைய அரசில் அங்கம் வகிக்கும் , இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
உரம் இல்லாது விவசாயிகள் எவ்வாறு பலன்களைப் பெற முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு தீர்மானங்களை எடுத்தவர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சரியான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தாலும், இப்போது அதற்கான நேரம் கடந்து போய் விட்டது, சரியான முடிவுகளை மற்றவர்களே எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தெல்கட சந்தையில் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வந்த போதே அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
நாட்டில் இடம்பெற்ற வெளிநாட்டுப் படையெடுப்புகளின் போதும் விவசாயத்திற்கு இவ்வாறான சேதம் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு செய்ய முடியாதவர்கள் வெளியேறி , முடிந்தவர்களிடம் நாட்டை ஒப்படைக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.