மஹிந்தவின் பதவி விலகல் தொடர்பில் விசேட அறிவிப்பு!
பிரதமர் பதவியில் இருந்து அவர் விலகுவது தொடர்பான அறிவிப்பு இன்று (03) காலை பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக பல நாட்களாக பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வரும் வதந்திகளில் உண்மையில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் இவ்வாறான பொய் பிரசாரங்களை வன்மையாக நிராகரிப்பதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.