தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு: எவற்றுக்கெல்லாம் அனுமதி?

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முழு ஊடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் கட்டுக்குள் இல்லாமல் அதிகரித்துவருகிறது. அதனையடுத்து, தமிழ்நாடு அரசு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை தொடர்ந்து அமல்படுத்திவருகிறது.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை போன்றவை இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முழு ஊரடங்கின் போது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் மேற்சொன்ன நேரத்தில் மட்டும் செய்லபட அனுமதிக்கப்படும். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
இதையும் படிங்க: தமிழகத்தில் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா: சென்னையில் 5,000-த்தைக் கடந்த பாதிப்பு

வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை. திருமணம் போன்ற நிகழ்வுகள் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் 100 பேருக்கு மிகாமல் திருமணத்தை நடத்திக்கொள்ள வேண்டும். திருமணத்திற்கு செல்வோர் பத்திரிக்கைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், நேர்முகத்தேர்வுக்கு செல்பவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கான இன்று அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.