ஒரு மனிதன் உயிர் வாழக் கூடிய நேரத்தில் அவரைப் பாராட்டுதல் என்பது மார்க்கத்தில் வரவேற்கத்தக்க விசயம்.
ஒரு மனிதன் உயிர் வாழக் கூடிய நேரத்தில் அவரைப் பாராட்டுதல் என்பது மார்க்கத்தில் வரவேற்கத்தக்க விசயம். பொதுவாக மரணம் அடைந்த பின்னர்தான் எல்லாவற்றையும் பாராட்டுவது. ஆனால் ஒரு மனிதன் வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டும் என்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ;nஷய்க் எம். வை. எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
கண்டி ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டின் கீழ் கண்டி நகர் ஜம்மிய்யதுல் உலமா, கண்டி நகர் பள்ளிவாசல்கள் சம்மேளனம், கண்டி முஸ்லிம் வர்த்தகர் சங்கம், கண்டி மீராக்காம் பெரிய பள்ளிவாசல் மற்றும் மலே பள்ளிவாசல்கள் ஆகிய அமைப்புக்கள் இணைந்து நடத்திய முன்னாள் கண்டி மாநகர சபை உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான அல்ஹாஜ் ஏ. எல். எம். நுஹ்மான் அவர்களது சேவை நலன் பாராட்டு விழா கண்டி மீராமக்காம் பெரிய பள்ளிவாசலின் கேட்போர் கூடத்தில்; நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் அஷ;nஷய்க் எம். வை. எம். ரிஸ்வி முப்தி பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
பாக்கிஸ்தான் நாட்டின் வதிவிடப் பிரதிநிதி அப்சல் மரைக்கார், கண்டி மாநகர சபையின் பிரதி முதல்வர் அல்ஹாஜ் இலாஹி ஆப்தீன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
ஒரு சமூக செயற்பாட்டாளரின் பெறுமதி மகத்துவமானது. ஒரு அருட் கொடை கையில் இருந்து போன பின்னர்தான் அதன் பொருளின் பெறுமதி தெரியும். என் மகளின் ஜனாஸா விசயத்திலும் நுஹ்மான் காக்காவின் பங்களிப்பு மிகவும் மகத்தான பங்களிப்பைச் செய்தார்.
நபி அவர்கள் (ஸல்) அவர்கள் நபித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னார் கஷ;டத்தில் உள்ளவர்களுக்கு சமூகப் பணிகள்தான் செய்தார்கள். திடீர் அபாயங்கள் ஆபாத்துக்கள் வரும் போது அதற்கு உதவியாக இருந்து மனிதாபிமானப் பணிகள் புரிந்துள்ளார்கள். அவர்களுக்கு நபித்துவம் பட்டம் கிடைக்கு முன்னரே அல் அமீன் என்ற அடையாளத்தைப் பெற்றுக் கொண்டார்கள். கஷ;டமான மக்களுடைய எல்லாக் காரியங்களிலும் நபி அவர்கள் பங்கெடுத்துள்ளார்கள். அனாதையாக இருக்கலாம.; விதைவைகளாக இருக்கலாம். மதம் மார்க்கம் என்பதற்கப்பால் மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டின் கீழ் நபி நாயகம் அவர்களுடைய காலம் ஒரு சிறப்பம்சமாக காட்சியளித்தது.
சமூக சேவை என்பது எல்லா பள்ளிவாசல்களிலும் இருக்க வேண்டும். ஒரு ஒவ்வொரு பள்ளிசால்களிலும் நடைமுறைப்படுத்துதல் அவசியமாகும். எந்த விசயத்தையும் மார்க்க ரீதியாக பார்ப்பது என்பது எமது கடமையாகும். அந்த வகையில் நபி நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவம் கிடைப்பதற்கு முன்பு இருந்தே சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றார்கள். மதீனாவில் முதல் மஸ்ஜித் உருவாக்கப்பட்டதற்குப் பிறகும் நபி அவர்கள் இதுதான் அங்கு உருவாக்கினார். மக்களுடைய கஷ;ட நஷ;டங்களுக்கு பங்ளிப்புச் செய்தார்கள்.
;இந்த கொவிட் தொற்றுக் காரணமாக ஜனாஸா நல்லடக்கம் விடயத்தில் முழு நாட்டுக்கும் பெரும் பங்களிப்பைச் செய்தவர் அப்சல் மரைக்கார் அவர்கள். அவரும் ஒரு பாரிய பங்களிப்பை செய்த ஒருவர். அவரும் மதிக்கப்படத் தக்க ஒருவர்.
ஒவ்வொரு பள்ளிகளிலும் மார்க்க வழிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றதோ அதே போன்று சமூக செயற்பாடுகளிலும் முக்கியத்துவம் பெறுதல் வேண்டும். நுஹ்மான் காக்கா இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் ; சமூப் பணிகள் இடம்பெற வேண்டும். ஒவ்வொருவரும் திடசங்கத்துடன் செயற்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் அதற்கு உண்டானவர்களை உருவாக்குதல் வேண்டும். அது தான் ஆக முக்கியம்.
உண்மையிலேயே நுஹ்மான் காக்கா செய்த வேவை கண்டியைப் பொறுத்த வரையிலும் யாராலும் மறறக்கவோ மறுக்கவோ முடியாது. நுஹ்மான் காக்கா ஒரு வீட்டில் ஜனாஸா வீழ்ந்தால் அந்;த குடும்பத்தின் உறவினர்களோடு ஒன்றித்து விடுவார்.
நபி நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா அடக்கும் முறைகள் பற்றி காட்டித் தந்துள்ளார்கள். அதில் ஒன்று தான் ஜனாஸாவைக் குளிப்பாட்டுதல், கபனிடுதல், கபரில் வைப்பது. அதற்கு மண் அள்ளிப் போடுவது அந்த கபருடைய விசயங்களை சிறப்பாக உள்ளன. அதிலே ஏராளமான படிப்பினைகள் உள்ளன. அந்த வகையில் ஜனாஸா நல்லடக்கும் விவகாரத்தில் எமது சமூகத்திற்கு மிகப்பெரும் பணியை நுஹ்மான் காக்கா செய்துள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.