யாழில் வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு – தெரிவத்தாட்சி அலுவலகர்
இந்தத் தேர்தலில் 67.72 சதவீதமான மக்கள் தமது வாக்குகளை அளித்திருக்கிறார்கள். இந்த வாக்களிப்பு வீதமானது கடந்த இரு தேர்தல்களோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது என யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் தேர்தல் மாவட்டத்தில் வாக்களிப்புக்கள் மாலை ஐந்து மணியுடன் நிறைவடைந்த நிலையில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வாக்கெண்ணல் மத்திய நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டன. இந்தத் தேர்தல் அமைதியான நிலையில் பாரிய வன்முறைகள் ஏதுவும் இன்றி நடைபெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் 67.72 சதவீதமான மக்கள் தமது வாக்குகளை அளித்திருக்கிறார்கள். இந்த வாக்களிப்பு வீதமானது கடந்த இரு தேர்தல்களோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணம் தேர்தல் ஆணையகத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களும் ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுகளுமே ஆகும்.
சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ம் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 59.8 சதவீத வாக்குகளும், கடந்த
ஜனாதிபதித் தேர்தலில் 66.6 சதவீத வாக்குகளுமே யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்டன. ஆனால் இன்றய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 67.72 சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
நாளை காலை ஏழு மணியளவில் தபால் மூல வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்படும். சுமார் பதினொரு மணியளவில் முதலாவது முடிவுகள் வெளியிடலாம் என எதிர்பார்க்கின்றோம் என்றார்
Comments are closed.